பதிவு செய்த நாள்
31
டிச
2014
12:12
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று, இலவச தரிசனத்தை ரத்து செய்துவிட்டு, மொழி தெரியாத வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் நகரில் உள்ள பாரம்பரியமிக்க கோவிலாகவும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள். ஏமாற்று வேலை தற்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்து?ர் சித்தர் பீடத்திற்கு, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பின், ஊருக்கு திரும்பும் வழியில், காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களிலும் தரிசனம் செய்ய வருகின்றனர்.
அவ்வாறு வரும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்களுக்கு, உள்ளூர் கோவில் நிலவரம் தெரிவதில்லை. தமிழ் அறியாத அவர்களை ஏமாற்றும் வகையில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, ‘பெருமாள் சகஸ்ரநாமம்’ என, ஐந்து ரூபாய் சூலிக்கப்பட்டது. அதிகாலை முதல் பி ற்பகல் வரை பல ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு இலவச தரிசனம் பற்றி தெரியவில்லை. மேலும், பல்லி தரிசனத்திற்காக தனியாக 2 ரூபாய் வசூலிக்கப்பட்டது. பிற்பகல் வரை இலவச தரிசனம் அனுமதிக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர். உள்ளூர் பக்தர்கள் சிலர், நேற்று பிற்பகல் கோவிலுக்கு வந்தபோது, கட்டணம் வசூலிப்பது குறித்து, கோவில் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, இதுபற்றிய தகவல் கோவில் செயல் அலுவலருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, “கோவில் நிர்வாகி சிலரிடம், இதுபோன்று வசூல் செய்யக்கூடாது என எச்சரித்துள்ளேன். மீண்டும் இதுபோன்று சிலர் செயல்படுவதால், பக்தர்களிடம் வசூல் செய்யாதவாறு நடவடிக்கை எடுக்கிறேன்,” என்றார்.
பக்தர்கள் கேள்வி: கோவில் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து பக்தர்கள் கூறுகையில், ‘கோவிலுக்கு வருவாயாக கிடைக்கும் வகையில் பல ஏக்கர் நிலமும், உண்டியல் வருவாயும் உள்ளது. அப்படி இருக்கும்போது, மொழி தெரியாமல் சுவாமியை தரிசிக்க வரும் பக்தர்களை ஏமாற்றி கட்டாய பண வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம்?’ என்றனர்.