பதிவு செய்த நாள்
31
டிச
2014
02:12
சென்னை: திருப்பதி தேவஸ்தானத்தில், அன்னதானத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, அன்னதானத்திற்கு, சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர், நேற்று முன்தினம், 10 டன் காய்கறிகளை இலவசமாக அளித்தனர். கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன், செயலர் சந்திரன் கூறுகையில், திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்த லாரியில், 2 லட்ச ரூபாய் மதிப்பிலான, 10 டன் காய்கறிகளை ஏற்றி அனுப்பினோம். பத்து ஆண்டுகளாக, மாதந்தோறும் அனுப்பி வருகிறோம். இந்த சேவை தொடரும், என்றனர்.