பதிவு செய்த நாள்
31
டிச
2014
02:12
பெ.நா.பாளையம் : ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில், நள்ளிரவில் கோவிலை திறக்கக் கூடாது என, இந்து முன்னணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. துடியலுாரில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. நிகழ்ச்சியில், ஆகமவிதிகளின்படி, நள்ளிரவில் கோவிலை திறக்கக் கூடாது. விதியை மீறி, ஆங்கிலப்புத்தாண்டில் கோவில் திறந்தால், அதை இந்து முன்னணி தடுக்கும். வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணிகளை விரைவு படுத்த, இந்து சமய அறநிலைத்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் காடேஸ்வரா சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், கோவை வடக்கு மாவட்ட பொருளாளர் தியாகராஜன், செயலாளர் பாலன், மற்றும் ஜெய்கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.