நடராஜர் கோவிலில் தேரோட்டம்: தேர்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2015 11:01
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை (4ம் தேதி) அருத்ரா தரிசன தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்கள் தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. சிதம்பரம் நடராஜர் கோவில் ஆண்டுக்கு இரு முறை தரிசன விழா நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவும், மார்கழியில் நடைபெறும் ஆருத்ர தரிசன விழாவும் சிறப்பாகும். ஆருத்ர தரிசன விழா கடந்த மாதம் 25ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி யது. தொடர்ந்து 27ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தினமும் பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் நாளை (4ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், சுப்ரமணி, சண்டிகேஸ்வரர் ஆகிய 5 தேர்கள் வீதியுலா நடைபெறும். விழாவையொட்டி, தேர்களை தயார் படுத்தும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து 5ம் தேதி அருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளது.