செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று சொர்க்க வாசல் திறப்பு விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 9 மணிக்கு பூதேவி, ஸ்ரீதேவி சமேத வெங்கட் ரமணனுருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து காலை 10 மணிக்கு சொர்க்கவாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, பஜனை கோஷ்டியினரும், பக்தர்களும் சொர்க்கவாசல் வழியாக கலசத்துடன் வெளியே வந்தனர். கோவிலை வலம் வந்து வெங்கட்ரமணருக்கு மகா தீபாராதனை செய்தனர்.