தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று காலை மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகம் நடந்தது. நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம் விஷேச பூஜை களும் நடந்தது. நடராஜர் சிலை திருவிதியுலா நடந்தது. மகாதீபாராதனையில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். கோவில் குருக்கள் நாகராஜ், சோமு பூஜைகளை செய்தனர். மண்டகப்பாடி, அரியூர், செங்கனாங் கொல்லை ஊரை சேர்ந்த வெள்ளாள செட்டியார் வகையறாவினர் உற்சவத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.