பதிவு செய்த நாள்
10
ஜன
2015
12:01
கும்பகோணம்: பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில், பவுர்ணமி ஜெயமங்களா யாகம் நடைபெற்றது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு, பிராச முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு செய்த சரபசூளினி அம்மன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். இங்கு, பிரதிமாதம் பவுர்ணமி தோறும் ஜெயமங்களா யாகம் நடைபெறும். ஜெயமங்களா யாகம் செய்து வழிபடுவதால், வழக்குகளில் வெற்றி, பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபடுதல், குழந்தை பாக்கியம், தொழில் விருத்தி போன்ற நற்பலன்கள் நடைபெறும், என்று நம்பப்படுகிறது. இங்கு, நடந்த ஜெயமங்களா யாகத்தையொட்டி, சரபசூளினிக்கு சிறப்பு புஷ்பலங்காரம் நடைபெற்றது.பரம்பரை அறங்காவலர் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில், 15க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால், ஜெயமங்களா யாகம் நடத்தினர். இரவு, 9 மணிக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெயமங்களா யாகத்தில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை, ஆலய பரம்பரை அறங்காவலர் நாகராஜசிவாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் செய்தனர்.