பதிவு செய்த நாள்
12
ஜன
2015
11:01
மயிலாப்பூர்: சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின், 168வது மகா உற்சவம், தியாகராஜபுரம் மயிலாப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 168வது மகா உற்சவம் நேற்று முன்தினம் மாலை 6:௦௦ மணியளவில், தியாகராஜபுரம் மயிலாப்பூரில் நடைபெற்றது. அதில், தியாகராஜ சமாஜத்தின் நிறுவனர், டாக்டர் ரமணி, ஸ்ரீ கிருஷ்ண கான சபாவின் செயலர் ஒய்.பிரபுவுக்கு நினைவு பரிசு வழங்கினார். அதை தொடர்ந்து, சுபாஷினி பார்த்தசாரதி குழுவினரின் பாட்டுக்கு, லட்சுமி வெங்கட்ரமணி வயலினும், மேலகாவேரி பாலாஜி மிருதங்கமும் இசைத்தனர். நேற்று காலை 8:௦௦ மணியளவில், சிறப்பு அபிஷேக ஆராதனையும், விதுாஷிகளால், கனராக பஞ்சரத்ன கீர்த்தனை கோஷ்டி கானமும், மங்கள ஆரத்தியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை சமாஜத்தின் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.