கன்னியாகுமரிக்கு மாதாஅமிர்தானந்தமயி தேவி வரும் 22ம் தேதி வருகை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஜன 2015 12:01
கன்னியாகுமரி : மாதாஅமிர்தானந்தமயி தேவி வரும் 22-ம் தேதி கன்னியாகுமரிக்கு வருகிறார். உலகெங்கும் உள்ள கோடிகணக்கான மக்களால் அம்மா என்றுஅன்புடன் போற்றப்படும் சத்குரு ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி வரும் 22-ம் தேவி கன்னியாகுமரிக்கு வருகிறார்.அவர் தமது துய அன்பினாலும்,தாய்மை அரவணைப்பினாலும் மக்களின் மனதில் ஆக்கபூர்வமான மாற்றத்தையும், ஆன்மீக விழிப்புணர்வையும் ஏற்படுத்திவருகின்றார். 40 ஆண்டுகளாக ஜாதி,மதம்,இன,மொழி வேறுபாடின்றி உலகெங்கும் சுமார் 4 கோடி மக்களுக்கு நேரடியாக தரிசனம் தந்துள்ளார்கள். கன்னியாகுமரியை அடுத்த சரவணந்தேரி அமிர்தபுரம், அமிர்த வித்யாலயம் பள்ளி மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு வரும் அவர் சத்சங்கம் பஜனை, தியானம் மற்றும் தரிசனம் நடைபெறுகிறது. இதற்காக டாக்டர் ராமச்சந்திரன் தலைமையில் வரவேற்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.இக்கூட்ட ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பிரம்மச்சாரி தபஸியாமிர்தசைதன்யா, பிரசன்னாமிர்தசைதன்யா,செல்வராஜ் ஆகியோர் செய்துள்ளனர்.