ராமேஸ்வரத்தில் மார்கழி அஷ்டமி: ராமநாதசுவாமி வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2015 10:01
ராமேஸ்வரம்: மார்கழி அஷ்டமி தினத்தையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதையொட்டி நேற்று அதிகாலை 2 மணிக்கு ராமேஸ்வரம் கோயில் நடை திறக்கப்பட்டு காலை 3 முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின், 6 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்கள், ஜீவராசிகளுக்கு படிஅளக்கும் நிகழ்ச்சி நடந்தது. வழியெங்கும் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின் கோயிலுக்கு பகல் 12 மணிக்கு சுவாமி, அம்மன் சென்றதும் கால பூஜை, உச்சி கால பூஜை முடிந்ததும் கோயில் நடை சாத்தப்பட்டது. மாலை 3.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்மனுக்கு பூஜை, அபிஷேகம் நடந்தது.