தேவகோட்டை : மார்கழி அஷ்டமி பிரதட்சனத்தை முன்னிட்டு சிவபெருமான் நகர் மக்களுக்கு படியளக்கும் என்ற ஐதீகத்தை முன்னிட்டு, நேற்று தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கையில் அரிசி படியுடன், பரிவார மூர்த்திகளுடன் பஞ்சமூர்த்திகளாக வெள்ளி வாகனங்களில் நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மக்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானோர் பக்தி பாடல் பாடியபடி உடன் வந்தனர்.