பதிவு செய்த நாள்
16
ஜன
2015
11:01
கடலூர்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் தைப் பொங்கலையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தைப் பொங்கலையொட்டி கடலூர், திரு வந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று காலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 10:00 மணிக்கு ஆண்டாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, உற்சவர் தேவநாதர் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் தேவநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலி த்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் காலை 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு கரும்பு, பொங்கல், மஞ்சள் கொத்து வைத்து படையலிட்டு சிறப்பு பூஜை நடந்தது. விரு த்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை ஆழத்து விநாயகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனையும், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகள் வெள்ளிக்கவசத்தில் அருள்பாலித்தனர். சந்தைத்தோப்பு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சித்தி விநாயகர், புத்து மாரியம்மன், அம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. வெள்ளிக் கவசத்தில் அங்காள பரமேஸ்வரி அரு ள்பாலித்தார். மருத்துவமனை ரோடு மோகாம்பரி அம்மன், ஜங்ஷன் ரோடு ஜெகமுத்து மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். திட்டக்குடி: வதிட்டபுரம் அரங்கநாத பெருமாள் கோவிலில், அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து திருமகிழ்ந்தவல்லி தாயார் சன்னிதியில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. சுகாசன பெருமாள் கோவிலில் அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. கூத்தப்பன் குடிகாடு வரதாராஜ பெருமாள் கோவிலில் பொ ங்கலையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.