வெள்ளக்கோவில் : வெள்ளக்கோவில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நான்காம் ஆண்டு விழா, 25ம் ஆண்டு கொலு வழிபாட்டு விழா நடந்தது. இதையொட்டி, சக்தி அழைப்பு எனும் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கத்தி போட்டனர். வீரக்குமார சுவாமி கோவிலில் இருந்து கன்னி தீர்த்தம் கொண்டு வந்து பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். எம்.எல்.ஏ., நடராஜ், நகராட்சி தலைவர் கந்தசாமி, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.