பதிவு செய்த நாள்
20
ஜன
2015
11:01
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை, புளியம்பட்டி திருநகரம் சாலியர் மகாசன பரிபாலன சபைக்கு பாத்தியப்பட்ட ஏழு கோயில்களின் கும்பாபிஷேக விழா வரும் 23 ம் தேதி (வெள்ளிக் கிழமை) காலை நடைபெறுகிறது. மாகாளியம்மன் கோயில், சிவன் விநாயகர் கோயில், தெப்பக்குளம் ஆயிரங்கண் மாரியம்மன் கோயில், மோதக விநாயகர் கோயில், சஞ்சீவி விநாயகர் கோயில், பழனியாண்டவர் கோயில், பிரம்ம ஸ்ரீ அய்யா கோயில் ஆகிய 7 கோயில்களின் கோபுர கலசங்களுக்கும், கும்பாபிஷேகம் நடக்கிறது. முதல் மற்றும் 2ம் கால பூஜைகள், கணபதி ஹோமம், புண்யாகவசனம், கோ, கஜ பூஜை. நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், விசேஷசாந்தி, சிவாச்சாரியார்கள் பிரதட்சண வீதி உலா உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை உறவின் முறை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், துணைத் தலைவர் தர்மராஜன், பொருளாளர் நெடுஞ்செழியன், செயலர் பொறுப்பு ரமேஷ்பாபு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்கின்றனர்.