காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோவில் தெப்போற்சவம் இன்று மாலை துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. காஞ்சிபுரம் அடுத்துள்ளது திருப்புட்குழி கிராமம். இப்பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும், 108 திவ்விய தேசங்களில் ஒன்றான மரகதவல்லி சமேத விஜயராகவப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் தெப்போற்சவம் ஆண்டு தோறும் தை மாதம் நடைபெறும். இதன்படி, இன்று மாலை 6:00 மணிஅளவில் பெருமாள் தாயாருடன் அலங்கரிக்கப்பட்டு தெப்பத்தில் எழுந்தருள்வார். முதல் நாள் மூன்று சுற்றும் இரண்டாம் நாள் ஐந்து சுற்றும் மூன்றாம் நாள் ஏழு சுற்று சுற்றி தெப்பத்தில் வலம் வருவார். இதற்கான ஏற்பாட்டை கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி செய்து வருகிறார்.