பழமை வாய்ந்த கோவில் புதுப்பிக்கும் பணி நிறுத்தம்: பக்தர்கள் அதிருப்தி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2015 11:01
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே 14ம் நுõற்றாண்டை சேர்ந்த பழமை வாய்ந்த கோவில் ரூ. 55 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி துவங்கிய வேகத்திலேயே நின்றதால் பக்தர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை தாலுகா பாச்சாப்பாளையம் கிராமத்தில் 14ம் நுõற்றாண்டு பழமை வாய்ந்த அழகிரி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. மன்னர்கள் காடவராயன், நரசிங்க முனைவராயர், கிருஷ்ண ÷ தவராயர் ஆட்சி காலத்தில் கோவில் கட்டுமான பணிகள் நடந்தன.
பூஜைகள் நிறுத்தம்: நுõற்றாண்டுகளை கடந்த இக்கோவில் தினசரி பூஜைகள் செய்யும் செலவுகளுக்காக வருமானம் வரும் வகையில் 42 ஏக்கர் நிலம் உள்ளது. கோவில் பழமையானதால் பக்தர்கள் வருகை முற்றிலும் இல்லாமல் போனது. கோவில் நிலத்தில் இருந்து வருவாய் கிடைக்காததால் தினசரி பூஜைகளும் நிறுத்தப்பட்டன. அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் கோவில் நில குத்தகை தொகை கேள்வி குறியானது. நிதி ஒதுக்கீடு கோவிலை புதுப்பிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் குமரகுரு எம்.எல்.ஏ., விடம் கோரிக்கை வைத்ததன் பேரில் தமிழக முதல்வரிடம் முறையிட்டார். கோவில் புதுப்பிக்கும் பணிக்கு அப்போதைய தமிழக முதல்வர் ஜெ., ரூ. 55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.கோவில் புதுப்பிக்கும் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டு கடந்த 6 மாதத்திற்கு முன் திருவான்மியூர் ஸ்ரீகாந்த் குழுவினர் பணிகளை துவங்கினர். கோவில் பின் பக்க சுவர்களை இடித்து கருங்கற்களை அகற்றினர். 2 மாதங்கள் மட்டுமே நடந்த இந்த பணி நிறுத்தப்பட்டது. இப்பணிகளை துவங்கிய ÷ வகத்திலேயே நிறுத்தியதால் பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.
நடவடிக்கை தேவை: கோவில் சுவர் இடிக்கப்பட்டதால் கோவிலிலுள்ள பொருட்களையும், சுவாமி சிலைகளையும் சமூக விரோதிகள் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சம் மக்களிடையே உள்ளது. நின்று போன கோவில் புதுப்பிக்கும் பணியினை மீண்டும் துவங்கி விரைந்து முடிப் பதற்கான நடவடிக்கைகளை குமரகுரு எம்.எல்.ஏ., மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.