குடியநல்லூரில் இன்று.. மூன்று கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2015 11:01
தியாகதுருகம்: குடியநல்லூரில் சிவன், பெருமாள், செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. தியாகதுருகம் ஒன்றியம் குடியநல்லூரில் கயிலாயநாதர், வரதராஜபெருமாள், செல்லியம்மன் கோவில்கள் உள்ளன. பக்தர்கள் முயற்சியால் 15 லட்சம் ரூபாய் மதி ப்பில் திருப்பணிகள் துவங்கி கடந்த மாதம் முடிந்தது. இக்கோவில்களின் கும்பாபிஷேகம் இன்று (22ம்தேதி) நடக்கிறது. முன்னதாக நேற்று முன்தினம் மாலை கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இன்று காலை 7 .30 மணிக்கு பிடாரியம்மன் கோவில் கும்பாபிஷேகமும், அதைத்தொடர்ந்து 9.30 மணிக்கு கயிலாயநாதர், வரதராஜபெருமாள் கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. மதியம் சுவாமி திருக்கல்யாண வைபவமும், இரவு திருவீதியுலாவும் நடக்கிறது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா விசாலாட்சி அம்மாள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.