வீரமுடையாநத்தம் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2015 11:01
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வாழைக்கொல்லை அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் வீரமுடையாநத்தம் ஆஞ்சநேயர் கோவில்களில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. வாழைக்கொல்லை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மாலை 3.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. கூடலையாத்தூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. வீரமுடையாநத்தம் வீரசக்தி ஆஞ்சநேயர் கோவிலில் மாலை 6:00 மணிக்கு 21 வகையான அபிஷேகம் நடந்தது. உடன் சகஸ்கர நாம அர்ச்சனை, ஆயிரத்தெட்டு அனுமன் போற்றி அர்ச்சனை, நாமாவளி அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. துளசி, வெற்றிலை, வடை மாலைகள் அணிவித்து அனுமன் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.