பதிவு செய்த நாள்
30
ஜன
2015
11:01
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகேயுள்ள வடுகபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, பிப்.,2ல் நடக்கிறது. விழா, இன்று காலை, 5:00 மணிக்கு மங்கள இசை, கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. நாளை காலை, 10:00 மணிக்கு அஷ்டலட்சுமி பூஜை, மாலை, 4:00 மணிக்கு அம்மனுக்கு புனித தீர்த்தம் எடுத்து வருதல், மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜை, முதற்கால யாக பூஜை, 108 திரவிய ஹோமம், பூர்ணாகுதி, மகா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. பிப்.,1 காலை, 8:30 மணிக்கு விசேஷ சாந்தி, 9:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம், யாக சாலை பூஜை, பூர்ணாகுதி, 11:00 மணிக்கு சுவாமிகளுக்கு எந்திர ஸ்தாபனம், விமான கலசம் அமைத்தல், அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 4:00 மணிக்கு மேல், 5:30 மணிக்குள் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, பிரம்மச்சாரி பூஜை, கன்னி பூஜை, தம்பதி பூஜையும்; 5:30 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை பூஜை நடக்கிறது. பிப்.,2 காலை, 4:30 மணிக்கு நான்காம் கால பூஜை, 6:45 மணிக்கு யாக சாலையிலிருந்து அபிஷேக குடம் புறப்படுதல், 7:15 மணிக்கு பால கணபதி, அங்காளம்மன், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், அண்ணாமலையார் விமான கலசங்கள், நவக்கிரக மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு தசதானம், தச தரிசனம், மகா அபிஷேகம், காலை, 9:00 மணிக்கு அன்னதானம் வழங்குதல் நடக்கின்றன.