Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சாமிர்தம் தயாரிக்க.. பழநியில் ... பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி உற்சவம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்! பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் தைப்பூச திருவிழா: அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜன
2015
04:01

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப்., 3 ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருகை தருகின்றனர். அதிகாலை நடை திறப்பு:மு ருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா பிப்., 3 ம் தேதி நடக்கிறது. வழக்கமாக கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு  திறக்கப்படும்.தைப்பூசத்தன்று அதிகாலை 3 மணிக்க கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 க்கு விஸ்வரூப தீபாரதணை. 4 க்கு உதய மார்த்தாண்ட  அபிஷேகம், காலை 7 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. 9 க்கு உச்சிக்கால அபிஷேகம், 12 க்கு உச்சிக்கால  தீபாரதணை நடக்கிறது.

பக்தர்களுக்கு காட்சி: சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.  சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமாகி, தீபாரதணை நடக்கும். பின் தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி எட்டு வீதிகள் வழியாக  பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் சன்னதி தெரு வழியாக கோயில் வந்து சேருகிறார்.

பக்தர்கள் பாதயாத்திரை:
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருகை  தருகின்றனர். பலர் நீண்ட வேலால் அலகு குத்தியும், காவடியுடனும், பலர் அலங்கார தேர்களை இழுத்தும் வருகை தருகின்றனர். தைப்பூசத்தன்று  கடலில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர்  ஞானசேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 
temple news
கோவை; கோவை - பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் - வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பழநி; பழநி, திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் அர்த்தமண்டவ கதவில் வெள்ளித் தகடுகள் பதிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar