ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில், பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியுள்ளது.
பழநி தைப்பூசம் நாளை நடப்பதால், இதில் பங்கேற்க ஆயிரக்ணக்கான பக்தர்கள் பாதயாத்திரை வருகின்றனர். இதனால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் ஒட்டன் சத்திரம் அருகே உள்ள குழந்தைவேலப்பர் கோயிலில் குழந்தை வடிவாக வீற்றிருக்கும் முருகனை தரிசித்து செல்வர். குழந்தைகள் விரும்பி உண்ணும் மிட்டாய் வகைகளை முருகனுக்கு வைத்து வழிபட்டு செல்வர். நேற்று குழந்தை வேலப்பர் கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது.
ஒரு புறம் நிழற்பந்தலில் இளைப்பாறும் பக்தர்கள், மறுபுறம் குழந்தை வேலப்பரை தரிசிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் என்று கோயில் வளாகம் முழுவதுமே களை கட்டி இருந்தது.
பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் குழந்தை வேலப்பரை தரிசிக்க ஒரு மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.