பதிவு செய்த நாள்
17
பிப்
2015
05:02
ராமேஸ்வரம்: மாசி சிவராத்திரி விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தேரோட்டம் நடந்தது. ராமேஸ்வரம் கோயிலில் மாசித் சிவராத்தி விழா பிப்., 9 ல், கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதனை தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில், சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனங்கள் மற்றும் பல்லக்கில் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 9 ம் நாள் விழாவான மாசி சிவராத்திரியையொட்டி, அலங்கரிக்கப்பட்ட கோயில் தேரில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் எழுந்தருளினர். கோயில் குருக்கள் மந்திரம் முழங்க மகா தீபாராதனை நடந்தது. பின், அங்கு கூடியிருந்த பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து இழுக்க தேர் ரதவீதிகளில் வலம் வந்தது. கோயில் இணை கமிஷனர் செல்வராஜ், தக்கார் குமரன் சேதுபதி, நகராட்சி தலைவர் அர்ச்சுனன், கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர்கள் கக்காரின், ராஜாங்கம், பேஷ்கார்கள் ராதா, அண்ணாத்துரை, கமலநாதன் பலர் பங்கேற்றனர்.