பதிவு செய்த நாள்
20
பிப்
2015
11:02
அவிநாசி : அவிநாசியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அவிநாசி, காந்திபுரத்தில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 70வது நந்தா தீப குண்டம் திருவிழா கடந்த 8ல் துவங்கியது.
தினமும் நந்தா தீப வழிபாடு, அபிஷேகம் நடந்தது. 17ல் அம்மன் சாட்டுதல், மகா சிவராத்திரி விழா, பல்லயம், கொடியேற்றம் ஆகியன நடைபெற்றன.நேற்று, சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமான பக்தர்களும், சிலர் குழந்தைகளுடனும் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் வெண்ணெய் பிரசாதமாக வழங்கப்பட்டது.குண்டம் இறங்குவதற்கான ஏற்பாடுகளை, தேவேந்திர குல வேளாளர் இளைஞர் நற்பணி மன்றத்தினர் மேற்கொண்டனர். இன்றிரவு வேடுபறி, பரிவேட்டை, தெப்பத்தேர், நாளை கொடியிறக்கம், மஞ்சள் நீர் உற்சவம், 22ல் பேச்சியம்மன் அபிஷேக பூஜை, 23ல் மகாபிஷேகத்துடன் உற்சவம் பூர்த்தி நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் சிவராமசூரியன் மற்றும் அவிநாசி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.