கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மஹாதேவாஜ்ஜாதம் சரவணபவம்மந்த்ரஸரபம்மஹத்தத்வாநந்தம் பரமலஹரீம்மந்த்ரமதுரம்மஹாதேவாதீதம் ஸுரகணயுதம்மந்த்ரவரதம்குஹம் வல்லீநாதம் மம ஹ்ருதி பஜே க்ருத்ரகிரீஸம்ஸுப்ரமண்ய பஞ்சகம்மகாதேவனிடமிருந்து உண்டானவரே, சரவணப் பொய்கையில் அவதரித்தவரே. சுப்ரமண்யனே, நமஸ்காரம். மந்திரங்களுக்கு மூலமாக விளங்குபவரே, சிறந்த தத்துவமாகத் திகழ்பவரே. ஆனந்த வடிவினரே, சுப்ரமண்யனே. நமஸ்காரம். பரம்பபொருளாகத் திகழ்பவரே. மதுரமான மந்திரவடிவாய் வாய் அருள்பவரே. மகாதேவனுக்கும் மேற்பட்டவரும் தேவர்களால் போற்றப்படுபவரே. சுப்ரமண்யரே நமஸ்காரம். உம்மைத் துதிப்போருக்கு. கோரிய வரமருளும் தயாபரனே. வள்ளியின் மணாளரே. கழுகுமலையில் வாசம் செய்யும் குகனே. உம்மை என் இதயக்குகையில் வைத்து தியானிக்கிறேன். கிருத்திகை அன்று இந்த துதியை பாராயணம் செய்தால் முருகப்பெருமான் அருளால் ரத்த சம்பந்தமான நோய்கள் விலகும்.