திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான நேற்று, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் வலம் வந்தனர். இந்த உற்சவத்துக்காக மாலையில் நடைபெறும் ஸ்ஹஸ்ர தீபாலங்கார சேவையை தேவஸ்தானம் ரத்து செய்தது. அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் வலம் வந்த பின்னர், தெப்பத்தில் எழுந்தருளினர். தெப்பத்தின்போது, அன்னமாச்சார்யாரின் கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது. இதைக் காண திரளான பக்தர்கள் கூடினர்.