பதிவு செய்த நாள்
03
மார்
2015
12:03
புதுக்கோட்டை: திருவப்பூர், மாரியம்மன் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. புதுக்கோட்டை, திருவப்பூர், மாரியம்மன் மாசி மாத பெருவிழாவையொட்டி, கடந்த, 22ம் தேதி பால்குடம் எடுக்கப்பட்டது. அன்று இரவு, பல்வேறு பகுதிகளில்,இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பல்வேறு விதமான பூக்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். அதிகாலையில், அபிசேஷக ஆராதனைகள் செய்து, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து, நேற்று முன்தினம், மாலை ஆறு மணிக்கு களரி பெரிய அய்யனாருக்கு திருவப்பூர் நாட்டார்கள் மற்றும் திருவப்பூர் குலாலர் தெருவில் உள்ள புரவித்திடலில் இருந்து புரவி எடுத்து, வீதி உலா நடைபெற்றது. அதன் பின், திருக்கோகர்ணம் திருக்கோகர்ணேஸ்வரர், பிரகதாம்பாள் கோவிலிருந்து அபிசேஷக ஆராதனைகள் செய்து, அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருவப்பூர், மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, கோவிலில் கொடியேற்றும் மற்றும் தீபாதராதனையுடன் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன், வெள்ளி வாகனத்தில் பவனி வந்து, சிறப்பு அலங்கரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். நிகழ்ச்சியில், கோவில் செயல் அலுவலர் கருணாகரன், உதவி ஆணையர் ஜெயபிரியா, ஆய்வர் ராமகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.