குளித்தலை: குளித்தலை கடம்பனேஸ்வரர் கோவில் மாசிமக பெருந்திருவிழாவில், தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.கரூர் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரத்தின வேல்பாண்டியன், கோவில் செயல் அலுவலர் யுவராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். திருத்தேர் கடம்பனேஸ்வர் கோவிலை சுற்றி நிலைக்கு வந்தது. பக்தர்கள் சார்பில், அன்னதானம் வழங்கினர்.