பதிவு செய்த நாள்
06
மார்
2015
12:03
பவானி: பவானி, செல்லியாண்டியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த, 17ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 24ம் தேதி மாரியம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்ச்சியும், 3ம் தேதி அம்மனுக்கு நீராட்டு விழாவும், 4ம் தேதி பொங்கல் விழாவும் நடந்தது. நேற்று காலை, செல்லியாண்டி அம்மன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்த பின், பெண்களால் சீர் வரிசைகள் கொண்டு வரப்பட்டு, செல்லியாண்டியம்மனுக்கு திருமாங்கல்யம் சாற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது. பின், தேரில் வைக்கப்பட்ட உற்சவர் அம்மன், மேளதாளங்கள் முழங்க, பக்தர்களால் தேரோட்டம் நடந்தது.இதில், பவானி எம்.எல்.ஏ., நாராயணன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் ஏராளமான பொதுமக்கள், தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.செல்லியாண்டி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், அக்ராஹரம், மெயின் ரோடு, தேர் வீதி வழியாக கோவில் நிலையை அடைந்தது.