திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில்,1008 கலசாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவங்கின. உலக சேமத்திற்காக கற்பக விநாயகருக்கு, 15 ஆண்டுகளுக்குப் பின் நடக்கும் 1008 கலசாபிஷேகத்தை முன்னிட்டு காலை 7 மணிக்கு, தலைமைக் குருக்கள் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் பூர்வாங்க பூஜைகள் துவங்கின. யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கற்பக விநாயகருக்கு அபிஷேகம் நடந்தது. 250க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள்,வேத விற்பன்னர்கள், திருமுறையார்கள், நாதஸ்வர, மேள இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். மாலையில் பிரதான கலச ஸ்தாபனம், முதற்கால யாகசாலை பூஜை,தீபாராதனை நடந்தது.