பதிவு செய்த நாள்
10
மார்
2015
10:03
புதுச்சேரி: ரெயின்போ நகர் சுமுக விநாயகர் கோவிலில், 6ம் ஆண்டு சவுபாக்கிய சோடச மகா கணபதி ஹோமம் நேற்று நடந்தது. இவ்விழா, கடந்த 4ம் தேதி காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 5ம் தேதி கடல் தீர்த்தவாரி, 6ம் தேதி கஜ பூஜை, கோ பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை நடந்தது. 7ம் தேதி அஸ்வ பூஜை, நவக்ரஹ பூஜை, நவக்கிரக அபிஷேக ஆராதனை, 8ம் தேதி பிரம்மசாரி பூஜை, பூர்ணாஹூதி, மந்தரபுஷ்பம், சதுர்வேத சமர்ப்பணம் நடந்தது.நேற்று காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், சவுபாக்ய சோடச மகா கணபதி ஹோமம், மகா பூர்ணாஹூதி, சுமுக விநாயகருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை, புஷ்பாஞ்சலி நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக குழு தலைவர் செண்பகராஜன், துணைத் தலைவர் குகன், போஷகர் தர்மராஜ், ஆலோசகர் ரங்கராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.