பதிவு செய்த நாள்
12
மார்
2015
11:03
வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா கோலாகலமாக நடந்தது. வால்பாறை அடுத்துள்ள வாட்டர்பால் இரண்டாம் பிரிவு விநாயகர், பத்ரகாளியம்மன், மாரியம்மன், முனிஸ்வரன், மதுரைவீரன், கருப்புசாமி, மாடசாமி, சக்திவிநாயகர், ஏழுகன்னிமார் ஆகிய ÷ காவில்களின், 52 வது ஆண்டு திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், கடந்த 7 ம்தேதி காலை அலகுபூட்டியும், அக்கினிசட்டி எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். . வால்பாறை அடுத்துள்ள லோயர்பாரளை எஸ்டேட் முத்து மாரியம்மன் கோவிலில், சக்திஅழைத்தல் நிகழ்ச்சியும், அம்மனுக்கு அலங்கார பூஜையும் நடந்தன. வால்பாறை அடுத்துள்ள ஸ்டேன்மோர் எஸ்டேட் முனீஸ்வரன் கோவில் முதலாமாண்டு திருவிழாவையொட்டி, அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.