மயிலம்: திண்டிவனம் அடுத்த தென்பசியார் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தில் தெய்வசுடரொளி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 10ம் தேதி மாலை 4 மணிக்கு முதல் யாக சாலை பூஜை நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு கலச பூஜை வழிபாட்டில் பா.ஜ., முன்னாள் தலைவர் இல.கணேசன், மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞானபால சுவாமிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை வழிபாடு நடந்தது. காலை 9 மணிக்கு கலசங்களை யாக சாலையிலிருந்து எடுத்து வந்தனர். கோவை பேரூர் ஆதின திருமடத்தை சேர்ந்த ஜெயபிரகாச சுவாமிகள் காலை 10.15மணிக்கு கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். கோவை மணிகண்ட குருக்கள் தலைமையில் சிவாச் சரியர்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற் பாடுகளை, தமிழ் ஆர்வலர் கோவை சேவூர்கிழார் செய்திருந்தார்.