திருமணத்தில் சொல்லப்படும் .. மாங்கல்யம் தந்துனானேன மந்திரத்தின் பொருள் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2015 02:03
திருமணத்தின் போது சொல்லப்படும் மந்திரங்களில் புகழ்மிக்கது மாங்கல்ய தாரணம். “மாங்கல்யம் தந்துனானேன மமஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி ஸுபகே த்வம ஜீவ சரதஸ் சதம்” என்னும் இந்த மந்திரம் தாலி கட்டும் சமயத்தில், கெட்டிமேளச் சத்தத்துடன் சொல்லப்படும். “மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நுõறாண்டு வாழ்வாயாக!” என்பது இதன் பொருள். தம்பதிகள், இந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து ஒற்றுமையாய் வாழலாமே!