பதிவு செய்த நாள்
21
மார்
2015
12:03
திருப்பூர்: திருப்பூர் தெற்கு தோட்டம், கருப்பராயன் கோவில் பங்குனி மாத தீர்த்த திருவிழா துவங்கியுள்ளது; அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். நேற்று காலை, தீர்த்தக்குடம் மற்றும் காவடி ஊர்வலம், ஆலங்காடு பகுதியில் மேள தாளத்துடன் துவ ங்கியது. பட்டத்தரசியம்மன் கோவில் வீதி, வெடத்தாலங்காடு, எருக்காடு தோட்டம், ஈஸ்வரமூர்த்தி நகர், பாலாஜி நகர், தெற்கு தோட்டம் வழியாக வந்த தீர்த்தக்குட ஊர்வலம், மதியம் கோவிலை அடைந்தது; பெண்கள் பொங்கல் வைத்தனர். கருப்பராயனிடம் உத்தரவு பெற்று, சுவாமிக்கு கிடாய் பலியிடப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு செல்வகணபதி, கன்னியாத்தாள், கருப்பராயனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது.