சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையையொட்டி ஏராளமானோர் நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ராகு காலத்தில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் துர்கைக்கு, காளிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்கள், நோயினால் பாதிக்கப் பட்டவர்கள் தீபம் ஏற்றி வழிபட்டால் பிரச்சனைகள் நீங்குவதாக நம்பிக்கை. மேலும், ராகு காலத்தில் தில்லையம்மனுக்கு பால் அபிஷேகம், காளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம், குங்கும அர்ச்சனை நடந்தது.