பதிவு செய்த நாள்
23
மார்
2015
12:03
அவிநாசி : அவிநாசியில், யுகாதி பண்டிகை தீர்த்த திருவிழா சிறப்பு பூஜைகள், நேற்று நடைபெற்றன. அவிநாசி, கைகாட்டிப்புதூர், எக்ஸ்டன்சன் வீதியில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில், யுகாதி பண்டிகை தீர்த்த திருவிழா நடைபெற்றது. கடந்த 20ல், கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம், திருவிளக்கு வழிபாடு நடந்தது.நேற்று காலை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் சுமந்து, 2 கி.மீ., ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் சுவாமி புறப்பாடு நடத்தப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எக்ஸ்டன்சன் வீதி மற்றும் குமரன் காலனியை சேர்ந்த பக்தர்கள், விழாவில் பங்கேற்றனர்.