குன்றத்து கோயில் பங்குனி திருவிழா நாளை கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2015 01:03
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா நாளை (மார்ச் 24) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.இன்று மாலை விநாயகர் சப்பரத்தில் சரவணப் பொய்கையில் எழுந்தருளல், கோயிலில் அனுக்ஞை பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடக்கிறது. நாளை காலை 11.45 முதல் 11.30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. மார்ச் 25ல் பிள்ளையார் திருவிழாவும், மார்ச் 30 கைபாரம் நிகழ்ச்சியும், ஏப்.3 பங்குனி உத்திரம், ஏப்.4 சூரசம்ஹாரம் லீலை, ஏப்.5 பட்டாபிஷேகம், ஏப்.6 முருகன் பெருமான், தெய்வானை திருக்கல்யாணம், ஏப்.7 தேரோட்டம், ஏப்.8ல் தீர்த்த உற்சவம் நடக்கும். திருவிழா நாட்களில் தினம் இரு வாகனத்தில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கும்.