காளையார்கோவில் : கொல்லங்குடி, அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா வரும் 28ல் துவங்குகிறது. 27ம்தேதி மாலை 6மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையும், 28ம் தேதி காலை 8 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. 29ம் தேதி 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ஏப்.4 ம்தேதி அம்மன் தங்க குதிரை வாகனத்தில் வலம் வருதல், 5ம்தேதி தேரோட்டம் , நடக்க உள்ளது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் இளையராஜா செய்து வருகின்றனர்.