பதிவு செய்த நாள்
23
மார்
2015
01:03
செங்குன்றம்:சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், அங்காள ஈஸ்வரி முனீஸ்வரர் கோவிலில், 50ம் ஆண்டு, பங்குனி உத்திர, தீ மிதி திருவிழா நடக்கிறது. அதையொட்டி, வரும், 24ம் தேதி காலை 8:00 மணிக்கு பால் குடம் எடுத்தல், இரவு 7:30 மணிக்கு மேல் காப்பு கட்டல் என்ற கொடி ஏற்று உற்சவம் நடைபெறும்.அன்று முதல், 12 நாட்களுக்கு பகுதிவாசிகளால் விழா நடத்தப்படும். ஏப்., 1ம் தேதி அம்பாள் அக்னி கப்பறை ஏந்துதல். 2ம் தேதி கிராம பிரதட்சிணம், 3ம் தேதி காலை முதல் தீப ஆராதனை, மாலை 4:30 மணி அளவில், தீ மிதித்தல் நடக்கும். வரும் ஏப்., 4ம் தேதி சந்திர கிரகணம் என்ப தால், அன்று பிற்பகல், 3:45 மணிக்கு மேல், இரவு 7:15 மணி வரை கோவில் நடை சாத்தப்படும். 5ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு உற்சவம் நடைபெறும்.