செஞ்சி: ஊரணித்தாங்கல் பாலமுருகன் கோவிலில் 108 பால் குடம் ஊர்வலம் நடந்தது. செஞ்சி அருகே உள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தில் கடந்த பிப்., 9ம் தேதி பாலமுருகன், விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து 48 நாள் மண்டலாபிஷேகம் நடந்து வந்தது. இதன் நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு காலை 9.30 மணிக்கு மாரியம்மன் கோவிலில் இருந்து 108 பால் குடத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, பாலமுருகனுக்கு அபிஷேகம் செய்தனர். முற்பகல் 11 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் மற்றும் மண்டலாபிஷேக நிறைவு வேள்வி நடந்தது. ஊராட்சி தலைவர் ஏழுமலை மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை பண்ருட்டி இடம்புரி விநாயகர் ஆலய அர்ச்சகர் சேகர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.