சிவகாசி: சிவகாசி சிவன் கோவியிலில் தங்க தேர் வேண்டுமென பக்தர்கள் நீண்ட நாட்கள் கோரிக்கை விடுத்தனர். இதை நிறைவேற்றும் விதமாக சிவகாசி தெய்விக பேரவை சார்பில் ரூ. 50 லட்சம் செலவில் தங்க தேர் செய்யும் பணிகள் நடந்து முடிந்தன. நேற்று பங்குனி உத்திர பவுர்ணமியையொட்டி புதிய தங்கத்தேர் நான்கு ரத வீதி வழியாக சென்று கோயிலை சேர்ந்தது. இதில் விசுவநாதர் விசாலாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.