சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகை வியாபாரரிகள் சங்கம் சார்பில் உழவாரப்பணி மேற்கொள்ளப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவி லில் வரும் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதனையொட்டி திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி பல்வேறு அமைப்பினர், ஒவ்வொரு நாளும் கோவிலில் உழவாரப் பணியை செய்து வருகின்றனர். நேற்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் முத்து குமரேசன் தலைமையிலான குழுவினர் ஆயிரங்கால் மண்டபத்திற்கும் சிவகங்கை குளத்திற்கும் இடையில் உள்ள புதர்களை அகற்றி, மண் மேடுகளை கலைத்து சுத்தம் செய்தனர். இப்பணியில் நுõற்றுக்கணக்காக பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் ஈடுபட்டனர். மேலும் கோவிலின் மற்றொரு பகுதியில் சென்னை வடபழனி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறை பணி மன்றம் சார்பில் தலைவர் சரவணன் தலைமையில் நுõற்றுக்கும் மேற்பட்டோர் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.