ஒரு இளைஞன் தன்னிடம் பழகிய நண்பன் ஒருவனை வீட்டுக்கு அழைத்து வந்தான். அவன் நல்லவன் போல் நடித்து அந்தக் குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற்றான். ஒரு கட்டத்தில், அவன் வீட்டில் இருந்த பொருளைத் திருடி விட்டு ஓடி விட்டான். இதுபோன்ற துரோகிகள் பற்றி நபிகள் நாயகம் சொல்லும் போது, அவன் (நய வஞ்சகன்) நோன்பு நோற்று தொழுகையில் மும்முரமாக ஈடுபட்டு, தான் ஒரு முஸ்லிம் என்று எண்ணிக்கொண்டாலும், அவன் வஞ்சகன் தான். அவன் நயவஞ்சகன் தான். ஏனெனில், ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிம்களுக்கு தன் நாவினாலோ கையாலோ வேதனை தரமாட்டான், என்கிறார். நயவஞ்சக நண்பர்களிடம் கவனமாக இருங்கள்.