சொக்கநாதர்-மீனாட்சி அருகில் இருக்கும் பிரியாவிடை யார்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2015 02:04
பிரியாவிடை என்பது பார்வதிதேவியே. இவள் சிவனை விட்டு பிரியவே மாட்டாள் என்பதால் இந்தப் பெயர். அவளது மானிடஅவதாரமே மீனாட்சி. எனவே, இருவரும் ஒருவர் தான். நிலை ஆற்றல், இயங்கு ஆற்றல் என இருசக்தி இருப்பதாக அறிவியல் கூறுகிறது. பார்வதிதேவி, சிவனோடு இருக்கும் போது நிலைசக்தியாகவும், தனித்து இருக்கும் போது இயங்கு சக்தியாகவும் (பக்தர்களுக்கு நேரில் வந்து அருளும் தொழில்) இருக்கிறாள்.