தற்போது ராசிக்கு 10ல் உள்ள சுக்கிரன் மே 3ல் இருந்து நன்மை தர உள்ளார். புதன் ஏப். 26 ல் இருந்து சாதகமான இடத்திற்கு மாறி நன்மை வழங்குவார். மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும், துணிவுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேலோங்கும். குடும்பத்துடன் விருந்து விழா என சென்று வருவீர்கள். உறவினர்கள் வருகையால் நன்மை உண்டாகும். மே 3க்கு பிறகு கையில் அதிக பணம் புழங்கும். தொழிலதிபர்கள், வியாபாரிகள் சிறப்படைவர். ஏப். 26க்கு பிறகு லாபம் உயரும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் முன்னேற்றம் பெறும். அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். ஏப். 14 மே 10,11ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
பணியாளர்கள் உழைப்புக்கேற்ற பலனைப் பெறுவர். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கை எளிதில் நிறைவேறும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
கலைஞர்களுக்கு, மாதத் தொடக்கத்தில் ஒப்பந்தம் பெற முயற்சி தேவை. தொழில் போட்டி மே 3க்கு பிறகு மறையும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மாணவர்களுக்கு இந்த மாதம் நற்பலன் உண்டாகும். புதனால் ஏப். 26 க்கு பிறகு கல்வி வளர்ச்சி ஏற்படும். திட்டமிட்டுப் படித்து தேர்வை உற்சாகமுடன் எழுதுவர். விடுமுறை கால படிப்புக்கு இப்போதே திட்டமிட்டால், நல்ல நிறுவனங்களில் சேர வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு கரும்பு, எள், காய்கறி போன்றவை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்களுக்கு விடாமுயற்சி தேவைப்படும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். ஏப். 26க்கு பிறகு குடும்பத்தாரின் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மே 3,4ல் புத்தாடை, நகைகள் வாங்குவர். மே 2க்கு பிறகு அண்டை வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும்.
நல்ல நாள்: ஏப். 14, 15, 16, 21, 22, 23, 24, 28, 29 மே 3, 4, 10, 11, 12, 13.
கவன நாள்: ஏப்.17, 18 மே 14 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்டம் எண்: 6,7 நிறம்: வெள்ளை, பச்சை
பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும். ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவரை வழிபடுங்கள். ப”வுக்கு ப”ந்தழை இடுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »