துலாம்: (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3) சிறப்பான வளர்ச்சி!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2015 02:04
மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லிவிடும் துலாம் ராசி அன்பர்களே!
கடந்த மாதம் சிற்சில பிரச்னைகள் நிகழ்ந்திருக்கலாம். ஏப். 26ல் புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் பிரச்னைக்கு விடைகொடுத்து முன்னேற்றம் காணலாம். 7-ம் இடத்தில் இருக்கும் கேது தொடர்ந்து நன்மை தருவார். சுக்கிரன் மே3ல் இடம் மாறினாலும், மாதம் முழுவதும் அவரால் நன்மையே. கேதுவின் பலத்தால் எடுத்த செயலில் வெற்றி கிடைக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். ஏப். 26க்கு பிறகு கணவன், மனைவி இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் கிடைக்கும். புத்தாடை, நகை வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். மே 3,4ல் பெண்களால் நன்மை ஏற்படும். 1,2,29,30ல் உறவினர்களால் நன்மையும், மே10,11ல் கருத்துவேறுபாடும் வரலாம்.
பணியாளர்கள் நல்ல வளர்ச்சியை காண்பர். ஏப். 26க்கு பிறகு புதிய பதவி கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். வேலைக்காக குடும்பத்தை விட்டு பிரிந்தவர் மீண்டும் ஊர் திரும்புவர். ஏப். 25,26,27 சிறப்பான நாட்களாக அமையும். தொழிலதிபர்கள், வியாபாரிகள், பெண்களை பங்குதாரராக கொண்டவர்களுக்கு வளர்ச்சிக் காலம். தொழிலில் வரும் சிறு சிறு தடங்கல்களை உடைத்து முன்னேற்றம் காண்பீர்கள். அதற்காக எதிலும் அதிக முதலீடு செய்ய வேண்டாம். ஏப். 19,20-ந் தேதிகளில் எதிர்பாராமல் பணவரவு இருக்கும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். வசதி பெருகும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண்பர்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர்.
பெண்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவர். மே 8,9 சிறப்பானநாட்களாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது.
நல்ல நாள்: ஏப். 17, 18, 19, 20, 25, 26, 27, 28, 29, மே 3, 4, 8, 9, 14.
கவன நாள்: ஏப். 21, 22 சந்திராஷ்டமம்.
அதிர்ஷ்ட எண்: 5, 6 நிறம்: வெள்ளை, சிவப்பு
பரிகாரம்: தினமும் நீராடியதும் சூரிய வழிபாடு நடத்துங்கள். செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை வழிபட்டு நிம்மதியான சூழலைப் பெறுங்கள்.
மேலும்
சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »