வலம்புரிச் சங்கு லட்சுமியின் அம்சம் கொண்டது. சங்கு இருக்கும் இடத்தில் லட்சுமியும், குபேரனும் நித்யவாசம் செய்வர். சங்கைத் தரையில் வைப்பது கூடாது. வெள்ளித் தட்டு, வாழை இலை, தானியம் இவற்றின் மீதே வைக்க வேண்டும். சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டு வர கைவிட்டுப் போன பொருள், சொத்து மீண்டும் கிடைக்கும். தொழிலில் லாபம் பெருகும். தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். சங்கில் விடும் நீர் புனிதத்தன்மை பெறும். அந்நீரை செவ்வாய், வெள்ளியன்று வீட்டில் தெளித்தால் தீயசக்தி அணுகாது. சங்கினால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால் முன்வினை பாவம் தீரும். கங்கை நீரை சங்கு மூலம் சிவனுக்கு அபிஷேகம் செய்ய பிறவிப்பிணி தீரும்.