ஆரணி - வந்தவாசி சாலையில், செய்யாறு தலத்தில் உள்ளது லட்சுமி நரசம்மர் கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரை நட்சத்திரத்தன்று பிரம்மோற்சவமும், சிரவணத்தில் தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. பத்து நாள் விழாவில் 7ம் நாள் கிரிபிரதட்சிணம் நடைபெறும். அப்போது பக்தர்கள் தேங்காயை உருட்டி விட்டு அடித்தண்டம் போட்டு சிறப்பு வேண்டுதல் செய்வதைக் காணலாம்.