பதிவு செய்த நாள்
27
ஏப்
2015
01:04
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, வாடகை அறைகள் மூலம், 12 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. திருமலையில் உள்ள மொத்த வாடகை அறை களில், 82 சதவீதம், பக்தர் களுக்கு ஒதுக்கப்படும். இம்மாதம், 1ம் தேதி முதல், பக்தர்களின் வசதிக்காக வாடகை அறை முன்பதிவில் புதிய நடை முறையை, தேவஸ்தனாம் அமல்படுத்தி உள்ளது. அதன்படி, பக்தர்களுக்கு இனி, 91 சதவீத அறைகள் ஒதுக்கப்பட உள்ளன. வி.ஐ.பி., பகுதியிலும், 57 சதவீத அறைகளில் இருந்து, 78 சதவீதத்திற்கு, வாடகை அறை முன்பதிவு அதிகரித்துள்ளது. இதனால், தேவஸ்தான வருவாய், 10 கோடி ரூபாயில் இருந்து, 12 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.