பதிவு செய்த நாள்
04
மே
2015
12:05
கோபி : கோபி நாயக்கன்காடு திருமலை வீதி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா, ஏப்.,27ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்.,28ல் பொட்டுசாமி பொங்கல், 29ல் கம்பம் நடப்பட்டது. இன்று சந்தன காப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. வரும் ஆறாம் தேதி மாலை நான்கு மணிக்கு, கோபி சந்தியா வனத்துறையில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல், இரவு, 10 மணிக்கு அம்மை அழைத்தல் நடக்கிறது. வரும் ஏழாம் தேதி காலை ஏழு மணிக்கு மாவிளக்கு பூஜை, ஒன்பது மணிக்கு பொங்கல் வைத்தல், மதியம் மூன்று மணிக்கு பால்குடம், அக்னி கும்பம் எடுத்தல், இரவு ஒன்பது மணக்கு திருக்கம்பம் எடுத்தல் நடக்கிறது.வரும் எட்டாம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், ஒன்பதாம் தேதி மதியம், 12 மணிக்கு மறுபூஜை, அன்னதானம் நடக்கிறது. ஊர்பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.